ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘2.O’… அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஜன-26க்கே ரிலீஸாக வேண்டிய படம், முக்கியமான வேலைகள் இன்னும் முடிவடையாததால் வரும் ஏப்-27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹாலிவுட்டுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ஹாலிவுட் படங்களைப்போலவே வெறும் நூறு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படையப்பா படம் வெளியான சமயத்தில் மூன்று மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்த அந்தப்படத்தில் இடைவேளையே நூறாவது நிமிடத்தில் தான் விட்டார்கள்.
ஆனால் இப்போது மொத்த படத்தையே நூறு நிமிடங்களில் முடித்துள்ளார்கள் என்றால் அது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.