வாய்ப்புக்காக சித்தார்த்தை அலை(பா)யவிட்ட விஜய்சேதுபதி…!


சித்தார்த் வாய்ப்பு கேட்டு போன யிடத்தில் எல்லாம் விஜய்சேதுபதி மறைமுக தடையாக இருந்துள்ளார்.. இத்தனைக்கும் விஜய்சேதுபதி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சித்தார்த்தை பற்றி எதுவும் கூறியதில்லை.. ஆனால் சித்தார்த் நாமும் வித்தியாமான படங்களில் நடித்து ஹிட் கொடுக்கலாம் என நினைத்து செய்த முயற்சிகள் விஜய்சேதுபதியினாலேயே தடைபட்டன.. இதை விஜய்சேதுபதி இருக்கும் மேடையிலேயே பகிரங்கமாக சொன்னார் சித்தார்த்.

விஜய்சேதுபதி நடித்திருக்கிற ‘சேதுபதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இதில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் பேசியதை அப்படியே தருகிறோம். “‘ஜிகர்தண்டா’ படத்தை முடித்ததும் கார்த்திக் சுப்புராஜிடம் அடுத்த படம் பண்ணலாம் என கேட்டேன்.. இல்ல ஜி, என் முதல் பட ஹீரோ விஜய்சேதுபதியை வச்சு அடுத்த படம் பண்றேன்னு சொன்னார்..

இதே மாதிரி தான் ‘சூதுகவ்வும்’ படம் வெளியானதும் அந்தப்படத்தோட இயக்குனர் நலன் குமாரசாமிகிட்ட, அசத்திட்டீங்க பாஸ்.. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் பாஸ் அப்படின்னா, அவரும் இல்லைங்க விஜய் சேதுபதியை வச்சுத்தான் அடுத்த படம் பண்றேன் அப்படின்னு சொல்றார்.

சரி.. ‘பண்ணையாரும் பத்மினியும்’ அருண்குமார்கிட்ட, அந்தப்படம் முடிஞ்சதுமே நாம எப்ப சேர்ந்து பண்ணலாம்னு கேட்டா, அவரும் அடுத்த படத்தையும் என் முதல் பட ஹீரோவை வச்சே பண்ணப்போறேன்னு சொல்லி இதோ ‘சேதுபதி’யை முடிச்சுட்டு நிக்கிறாரு.. இனி வர்ற நாட்கள்லயாவது எங்கபக்கமும் அவரோட டைரக்டர்களை கொஞ்சம் அனுப்பி வச்சா நாங்களும் எதோ ஒண்ணு ரெண்டு ஹிட் கொடுத்துக்குவோம்” என தனது ஆதங்கத்தை கொட்டிவிட்டார் சித்தார்த்..