ஆப்பு அசைத்த குரங்கின் கதையாக ஆகிவிட்டது சிம்பு அனிருத் இருவரின் நிலையும்.. நடிகர்சங்க தேர்தலுக்கு முன் விஷாலை தரக்குறைவாக பேசியபோதே தான் எப்படிப்பட்ட ஆள் என்பதை கோடிட்டு காட்டிவிட்டார் சிம்பு.. ரஜினி, கமல் இருவரையும் கிண்டல் பண்ணும் விதமாக ‘உலக நடிகர் சங்கம்னு கூட பெயர் வைக்கலாமே என சிம்பு சொன்னபோது, வம்பை விலைகொடுத்து வாங்குகிறாரே என லேசாக கருகல் வாடை வந்தது..
ஆபாசமான பாடலை வெளியிட்டதும் அல்லாமல் அதேபோல 15௦ பாடல்களை அவரும் அனிருத்தும் தயார்செய்து வைத்துள்ளோம் என சொல்கிறார் என்றால் மக்கள் எல்லாம மடையர்கள் என நினைத்துவிட்டார் போலத்தான் தெரிகிறது..
முதற்கட்டமாக கோவையில் வழக்கு தொடர்ந்தார்கள்.. இனி அடுத்து வரும் நாட்களில் மாவட்ட வாரியாக வழக்குகள் தொடரப்பட இருப்பதாக கேள்வி.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்டதற்காக வழக்குகளை சந்திக்கும் நிமித்தமாக சிம்புவும் அனிருத்தும் ஊர் ஊராக தமிழக சுற்றுப்பயணத்துக்கு தயாராக வேண்டியதுதான்….