பொதுவாக தங்களுக்கு வேண்டாத நாடுகளை அழிவுக்கு உள்ளாக்க, சில போர் தொடுப்பதற்கு பதிலாக பயோ கெமிக்கல் ஆயுதங்களை எதிரி நாடுகள் மீது பிரயோகப்படுத்தும். போரை வித இதில் பாதிப்பு அதிகம்.. நம் ஊரில் இருக்கும் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி மண்ணை மலட்டுத்தன்மை ஆக்கிய கருவேலம்செடிகள் எல்லாம் இப்படி வந்தவை தான்.
அப்படி ஒரு ஆபத்து தான் இப்போது கலாச்சார சீரழிவை உருவாக்க சிம்புவின் பாடல்கள் மூலமாக கிளம்பியுள்ளது. ‘பீப் சாங்’ என கேடுகெட்ட ஒரு பாடலை வெளியிட்டதோடு, நான் அப்படித்தான் பண்ணுவேன், இதேபோல என்கிட்டே இன்னும் 15௦ பாடல்கள் இருக்கின்றன என பயம் காட்டியிருக்கிறார் இந்த மன்மதன்.
துப்பாக்கியில் இருந்து முதல் குண்டு வெடித்த சத்தம் அடங்க்வதற்குள் இரண்டாவது குண்டு வெளிவந்தது என ஒரு நாவலில் சொல்லியிருப்பார்கள். அந்த மாதிரி பீப் சாங் விவகாரம் கொதிநிலையில் இருக்கும்போது சிம்பு பாடியது என்று வாட்ஸ் அப்பில் இன்னொரு பாடல் பரவிவருகிறது.
‘கொல்லாம என்ன கொன்னுட்டாடா… என ஆரம்பிக்கிற அந்தப்பாடலில் அந்த பொண்ணுங்க மனச தொறந்தா அந்த பூவே பீர் வாசம் அடிக்கும்” என்று போகிறதாம்.. தயவுசெய்து அடுத்த பாடல் எதுவும் வெளியாகும் முன் சிம்புவிடம் மீதி இருக்கும் அந்த 148 வைரஸ்களை எப்படியாவது அழிக்க முடியுமா..?