சிம்புவை யாருங்க இங்க பார்க்கிறா..? ; ‘ஷார்ப்’ கட் பண்ணிய தெலுங்கு சினிமா..!.


சிம்பு ‘பீப் சாங்’ விவகாரத்தால் தலைமறைவு என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திக்கொண்டு இருக்க, தற்போது அவருக்கு ஆறுதல் தரும் ஒரே செய்தி என்றால் அது அவர் நடித்த ‘வாலு’ படம் தெலுங்கில் ‘ஷார்ப்’ என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. அட சிம்புவுக்கு ஆந்திரா லெவல்ல மார்க்கெட் சூடு பிடிக்குதா என உடனே அதிர்ச்சியாகவேண்டாம்.

இந்தப்படம் அங்கே டப்பிங் செய்யப்படுவது ஹன்சிகாவுக்காகத்தான்.. அவருக்கு அங்கே இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி இந்தப்படத்தை பிசினஸ் பண்ணுகிறார்கள் அவ்வளவுதான்.. அதுமட்டுமல்ல, படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக கருதியவர்கள், சிம்பு நடித்த காட்சிகளில் பத்து நிமிட காட்சிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி தூக்கிவிட்டார்கள். கேட்டால், “சிம்புவ பார்க்க யாரு சார் வர்றாங்க… ஹன்ஷிகா சார்” என்கிறார்களாம்