சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் சூப்பராக இருந்தும் அந்தப்படத்தை தயாரித்த லிங்குசாமியின் கடன் பிரச்சனை காரணமாக பல மாதங்கள் ரிலீஸாகாமல் இழுத்தடித்து எப்படியோ ஒரு வழியாக ரிலீஸானது. இதிலிருந்து பாடம் கற்ற சிவகார்த்திகேயன், இனி யாருடைய தயாரிப்பிலும் நடிப்பதில்லை என முடிவெடுத்தார். தனக்குள்ள மார்க்கெட் வேல்யூவை பயன்படுத்தி தனது நண்பர் ராஜாவை வைத்து சொந்தமாக கம்பெனி துவங்கி ரெமோ படத்தை தயாரித்தார்.
அந்தப்படம் வெற்றி பெற்றதும் சூட்டோடு சூடாக மோகன்ராஜா டைரக்சனில் தற்போது நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தையும் சொந்தமாக தயாரித்து வருகிறார்.. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது பொன்ராம் டைரக்சனில் புதிதாக தான் நடித்துவரும் படத்தையும் தானே தயாரித்து வருகிறார்.
ஆனால் இப்போது இந்தப்படத்திற்கு பைனான்ஸ் பற்றாக்குறையால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்வதற்கே கிட்டத்தட்ட 3௦ கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம். ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தயாரிக்காமல் அகலக்கால் வைத்ததால்தான் கவுதம் மேனன், லிங்குசாமி தயாரித்த படங்கள் ஹிட்டாகியும் கூட சிக்கலில் மாட்டினார்கள்.
தற்போது நன்றாக வளர்ந்துவரும் இந்த நேரத்தில் அதேபோன்ற சிக்கலை சிவகார்த்திகேயனும் தேவையில்லாமல் இழுத்துக்கொண்டாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.