திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயனை அவர் வாசலுக்கு வந்து அங்கே நின்றிருந்த காருக்குள் ஏறுவதற்குள், வழியில் நின்றிருந்த கமல் ரசிகர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயனுடன் பாதுகாப்பிற்காக சில ஆட்கள் உடன் வந்ததால் ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பினார் சிவகார்த்திகேயன்.. இத்தனைக்கும் சிவகார்த்திகேயன் வந்த அதே விமானத்தில் தான், அதே விழாவில் கலந்து கொள்ள கமலும் வந்துள்ளார். சிவகார்த்திகேயன் செல்வதற்கு சற்று நேரத்திற்கு முனர்தான் அவரும் விமான நிலையத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்..
தங்களது தலைவருக்கு உரிய வரவேற்பை அளித்த அந்த கமல் ரசிகர்கள் தான், பின்னால் வந்த சிவகார்த்திகேயனிடம் இந்த மாதிரி ஒரு வேலையை பார்த்துவிட்டார்கள்.. கமலுக்கு சிவகார்த்திகேயனுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லையே.. நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..? அப்புறம் எதற்காக தாக்கினார்களாம்..?
ஒரு பேட்டியின்போது ஸ்ருதிஹாசனைப்பற்றி தரக்குறைவாக பேசிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.. அதனால் தான் இந்த தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், எப்போதும் ரஜினியின் ரசிகன் என சொல்லிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் கமலின் காக்கிச்சட்டை டைட்டிலை எப்படி வைக்கலாம் என ரொம்ப லேட்டாக ஒரு காட்டு காட்டிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கமல் ரசிகர்களில் இந்த அளவுக்கு மட்டமானவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என நினைக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. விஸ்வரூபம் பட ரிலீசின்போது கமல் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து கூறியபோது இவர்களில் எவராவது வாயை திறந்திருப்பார்களா என்ன..?.