பரோட்டா சூரிக்கு சினிமாவில் விசிட்டிங் கார்டு கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன் தான். அதனால் தான் சுசீந்திரன் அழைத்தால் ‘எஸ் சார்’ என முதல் ஆளாக வந்து நிற்பார்.. மாவீரன் கிட்டு படத்தில் கூட ஒரு துணை நடிகர் ரேஞ்சில் தான் நடித்திருந்தார்.. இருந்தாலும் குருவுக்காக நடித்தார். ஆனால் இனி அவரது படங்களில் அழைத்தால் தேதியை காரணம் காட்டி நடிப்பதில்லை என முடிவுசெய்துவிட்டாராம்..
காரணம் சம்பளம் என அள்ளித்தராமல் ஒரு சிறிய தொகையை மட்டும் கிள்ளித்தருகிறாராம் சுசீந்திரன்.. எத்தனை நாளைக்கு இப்படியே போக முடியும் என வெறுத்து தான் இந்த முடிவுக்கு வந்துவிட்டாராம் சூரி.