“வேணாம்.. விட்ருங்க.. அந்தம்மா அவ்ளோ பெரிய ஆளில்லை’” ; ரசிகர்களை அடக்கிய சூர்யா..!


சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பிறகு, நீட் தேர்வு விவாகரம் தமிழகத்தில் அனைவரிடமும் ஆவேசத்தை கிளப்பிவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கேதிராக திரையுலகில் உலா பிரபலங்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தனது தந்தையுடன் இணைந்து ‘அகரம்’ பவுண்டேசன் மூலமாக கல்வி சேவை செய்துவரும் நடிகர் சூர்யாவும் நீட் தேர்வு குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் கோபமான தமிழிசை சௌந்தர்ராஜனும் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் என்கிற விதமாக ஏகடியம் பேசினார். சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு பொது விஷயங்களில், குறிப்பாக தங்கள் கட்சி, ஆட்சி விஷயங்களில் நடிகர்கள் எதுவும் கருத்து சொல்லிவிடக்கூடாது.. அவ்வளவுதான்.. வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள்.. பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் அப்படி ஒருவர்தான்.

சூர்யா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புறந்தள்ளினாலும் ஏற்கனவே நீட் விஷயத்தால் சூடாக இருந்த சூர்யாவின் ரசிகர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது காரசாரமான விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் வைக்க ஆரம்பித்தனர்.

இருந்தாலும் விமர்சனங்கள் என்பது ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும் என தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலமாக ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை” என கூறியுள்ளனர்.