ஹன்ஷிகா இருந்தும் ரிலீஸாகாத வாரிசு நடிகர் படம்..!


சீனியர் நடிகை ஜெயபிரதா தனது மகன் சித்துவை, தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகம் செய்வேன் என பிடிவாதமாக நின்று ‘சத்யம்’ பட இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ‘உயிரே உயிரே’ படத்தில் நடிக்க வைத்தார்.. அறிமுக ஹீரோ தான் என்றாலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹன்ஷிகாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

படத்தை வெளியிடும் உரிமையை ஈராஸ் நிறுவனத்திற்கு கைமாற்றினார். கடந்த ஜூலை மாதம் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் சத்யம் தியேட்டரில் வைத்து நடத்தினார். ஆனால் அதன்பின் இதுவரை ஏழு மாதங்கள் கடந்தும் கூட படம் ரிலீசாவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை..

விசாரித்ததில் என்னதான் படத்தின் ஹீரோ நடிகை ஜெயப்ரதாவின் மகனாக இருந்தாலும், அவருக்கும் ஹன்ஷிகாவுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை என்றும், அதனால் படம் பெரிய அளவில் ரீச்சாக வாய்ப்பில்லை என்பதால் படத்தை விநியோகஸ்தர்கள் மிகக்குறைந்த விலைக்கே கேட்பதாகவும் அதனால் தான் படம் பெட்டிக்குள் கிடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.. ஹன்சிகா இருந்துமா ஒரு படத்துக்கு இந்த நிலைமை..? அடப்பாவமே..!