‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கிய ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்கிற படம் இன்னும் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் இயக்கிய’ ‘சௌகார் பேட்டை’ வெளியாகிவிட்டது. அந்தப்படத்தில் ஓரளவுக்கு லாபம் கிடைத்ததால் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்தனர்.
அத்துடன் தங்களது அடுத்த படமான ‘பொட்டு’வையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரித்து வருகிறார்கள். இந்தப்படத்திற்கு சம்பள அச்சாரமாக வடிவுடையானுக்கு சுமார் 6௦ லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை அட்வான்ஸ் கொடுத்து வாங்கி கொடுத்துள்ளதாக கேள்வி.. ஆனால் மீதி தொகையை வடிவுடையான் தானே கட்டியாக வேண்டும்..?
அதனால் பொட்டு படத்தை பர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரிக்க ஒப்பந்தம் போட்டு ஒரு தொகையை வாங்கிவிட்டாராம் வடிவுடையான். படத்தில் நடிக்கும் பரத், இனியா, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோரிடம் நைச்சியமாக பேசி, அவர்களது சம்பளத்தை நாலில் ஒரு பங்காக குறைத்து அப்படி இப்படி என படத்தை முடித்துவிட்டாராம்.
அப்படியே அட்வான்ஸ் மட்டும் கொடுத்திருந்த அந்த வீட்டையும் சொந்தமாக்கி விட்டார் என நாம் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்..?