ஓரளவு பிரபலமாகி விட்ட நபர்கள் என்ன ஐடியாவுல தான் திருமணம் பண்ணிக்கொள்கிறார்களோ என ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது.. சினிமாவில் இருப்பவர்கள் தான் அப்படி என்றால், சின்னத்திரையில் இருப்பவர்கள் கூட கொஞ்சூண்டு கிடைக்கும் புகழுக்கே மதி மயங்கி வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள்..
டிவி தொகுப்பாளினி ரம்யா சின்னத்திரை நிகழ்ச்சிகளானாலும், சினிமா விழாக்களானாலும் நிகழ்ச்சிகளை மற்றவர்களை போல மொக்கை போடாமல் தொகுத்து வழங்குவதில் வல்லவர்.. கடந்த வருடம் தான் திருமணம் செய்துகொண்டார்.. இதற்கிடையே திடீரென ‘ஓ காதல் கண்மணி ‘ படத்தில் நாயகனின் தோழியாக வந்து, அதாவது சினிமாவில் அடியெடுத்து வைத்து, அட இவரும் கூட வந்துட்டாரா என ஆச்சர்யப்படுத்தினார்.
படம் வெளியான சில நாட்களிலேயே இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளதாக அரசால் புரசலாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதை ஒப்புக்கொண்டுள்ள ரம்யா, தான் படத்தில் நடித்ததற்கும் விவாகரத்திற்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார்.
அதை உறுதிப்படுத்தும் விஷயம் ஒன்றையும் தெரிவித்துள்ளார். தனக்கு திருமணமானது கடந்த பிப்ரவரியில்.. ஆனால் தான் விவாகரத்து முடிவுக்கு வந்தது திருமணம் ஆகி சரியாக பத்தாவது நாளில்.. ஆனால் தனக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ கடந்த வருடம் செப்டம்பரில்.. அதனால் சினிமாவால் விவாகரத்து முடிவை எடுக்கவில்லை என கூறியுள்ளாராம்.
ஏம்மா பத்து நாள்லேயே விவாகரத்து முடிவாம்மா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்றெல்லாம் கேட்கமுடியாது. சிலர் திருமணமான மறுநாளே கூட அந்த முடிவை எடுத்து விடுவார்கள்.. விஷயம் இல்லாவிட்டால் விவாகரத்து தானே வழி..