ரஜினியவே கேஸ் போட வச்சுடாதீங்கப்பா..!

இப்பதான் ரஜினி பட டைட்டிலான ‘பாட்ஷா’வை தனது புதிய படத்துக்கு வைக்கப்போவதாக சொல்லி, சமீபத்தில் தான் ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் ஜி.வி.பிரகாஷ.. அந்த சலசலப்பு அடங்குவதற்குள் இப்போது பாபி சிம்ஹா நடிக்கும் படத்திற்கு ‘வீரா’ என டைட்டில் வைத்து, மீண்டும் ஊர் வம்புக்கு, கம்பு சுத்த ஆரம்பித்துவிட்டார்கள்..

ரஜினி நடித்த கிட்டத்தட்ட 150 படங்களின் டைட்டில்களில் இதுவரை சுமார் இருபது டைட்டில்களை ரீமேக்கிற்காக பயன்படுத்திருப்பார்கள்.. படம் எடுக்க வரும் பலரும் சொந்தமாக டைட்டிலை யோசிக்காமல், ரஜினி டைட்டிலையே வாங்கிக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் அவையெல்லாம் தீர்ந்தபின் என்ன செய்வார்களாம்.?

இது இப்படி இருக்க, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூட ரஜினி பல வருடங்களுக்கு முன் நடித்த ‘காளி’ படத்தின் பெயரையே வைக்க இருக்கிறார்கள் என பேச்சு அடிபட்டு வருகிறது.. இந்நிலையில் ரஜினிக்ககே கூட தனது படத்தின் தலைப்பு மீண்டும் தேவைப்படும் நேரத்தில் அதை இன்னொருத்தரிடமிருந்து பெறவோ, அல்லது வேறொருவருக்கு விட்டுததராமல் இருக்கவோ அவரும் டைட்டிலுக்காக கோர்ட் படியேறி கேஸ் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.