நட்புக்காக இனி ரிஸ்க் எடுக்க தயாரில்லை ; உஷாரான விஜய் ஆண்டனி..!


வித்தியாசமான கதைகளாக தேடித்தேடி நடித்துவந்தார் விஜய் ஆண்டனி.. குறிப்பாக அவர் நடித்தால் அது வித்தியாசமான கதையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருந்தது.. ஆனால் சமீபத்தில் வெளியான ‘காளி ‘ படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்க வில்லை..

இந்தப்படம் மட்டுமல்ல, இதற்கு முன்னால் வெளியான ‘அண்ணாதுரை ‘ படமும் கூட பெரிய அளவில் போகவில்லை. ‘காளி ‘ படத்தை இயக்க வாய்ப்பு கேட்டது உதயநிதியின் மனைவி கிருத்திகா என்பதால் தான் நட்பின் அடிப்படையில் வாய்ப்பளித்தாராம் விஜய் ஆண்டனி.. ஆனால் படம் சரியாக போகாததால், இனி நட்புக்காக ரிஸ்க் எடுக்காமல், தன் மனதுக்கு சரியென படும் கதைகளையே தேர்வுசெய்ய முடிவெடுத்துள்ளாராம் விஜய் ஆண்டனி.