கொடுத்த வாக்குறுதியை பிறந்தநாளில் காற்றில் பறக்கவிட்ட விஜய்.


விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடித்துவரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது. ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், ரஜினியைப்போல விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ். அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார். மேலும், “மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறினார் விஜய்.

ஆனால், அதன்படி நடக்காமல், இப்போது சிகரெட் பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதேபோல், 2012-ம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரிலும் சுருட்டு பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருப்பார் விஜய்.. ஆனால் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெறவில்லை.. அதேபோல ஆளப்போறன் தமிழன் என கோஷம் போட்ட மெர்சல் படத்தில் வலுக்கட்டாயமாக புகைபிடிக்கும் காட்சியை வைத்திருந்தார் விஜய்..