டிக் டிக் டிக் – விமர்சனம்


தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து மக்களை காப்பாற்ற போராடும் விண்வெளி வீரர்களின் பயணம் தான் டிக் டிக் டிக்

வானிலிருந்து ஒரு விண்கல் சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வந்து விழுகிறது.இதில் பலர உயிரிழக்கின்றனர் இதையடுத்து அடுத்து ஏழு நாட்களில் 200 டன் கொண்ட விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும் அந்த விண்கல் விழுந்தால் பல கோடி உயிரிழப்பு ஏற்படும் எனவும் தெரியவருகிறது இதை தடுத்து அந்த விண்கல்லை அழிக்க விண்வெளியில் மற்றொரு நாடு பாதுகாப்பாக வைத்துள்ள அணு ஆயுத ஏவுகணையை திருட ராணுவ கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது

அந்த ஏவுகணையை திருடுவதற்கு மேஜிக்மேனாக இருந்து திருடனாக மாறி ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவியின் உதவியை நாடுகிறார்கள் அவர் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்தி இந்த வேலையே அவரை ஈடுபட சம்மதிக்க வைக்கிறது ராணுவ அதிகாரிகளின் குழு ரவியோடு சேர்த்து அவரின் நண்பர்களான அர்ஜுன் மற்றும் ரமேஷ் திலக் உயர் அதிகாரிகளுடன் விண்வெளிக்கு செல்ல தயாராகிறார்கள்

அந்த நேரம் யாரும் எதிர்பாக்காத வில்லன் ஒருவன் ஜெயம் ரவியின் மகனை பிணைக்கைதியாக வைத்து ஏவுகணையை கேட்கிறான் ஜெயம் ரவி என்ன முடிவெடுக்கிறார், யார் அந்த மர்ம வில்லன், விண்கல் தகர்க்கப்பட்டதா ????

ஆசியா கண்டத்திற்கு முதல் விண்வெளி படத்தை கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ஜெயம் ரவி மேஜிக்மேனாகவும் ,திருடனாகவும், விண்வெளி வீரனாகவும் ,பாசக்கார தந்தையாகவும் வெவ்வேறு பரிமாணங்களில் அசத்தியிருக்கிறார். நிவேதா பெத்துராஜிற்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சரியாக பயன்படுத்தியிருக்கிறார்

அர்ஜுன் மற்றும் ரமேஷ் திலக் காமெடி ஏரியாவை கவனித்து கொள்கிறார்கள் ஜெயப்ரகாஷிற்கு வழக்கமான கதாபாத்திரம் தான் ஆனால் தன பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன் ,பாலாஜி வேணுகோபால் ,கே பாலாஜி ,ரித்திகா ஸ்ரீனிவாஸ் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை சரியாய் செய்திருக்கிறார்கள் .ஜெயம் ரவியின் மகன் ஆரவிற்கு இது அறிமுக படம் இதில் ரவியின் மகனாவே ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கலை இயக்குனர் மூர்த்தியின் விண்வெளி செட்டும் வெங்கடேஷின் ஒளிப்பதிவும் நம்மை விண்வெளிக்கே அழைத்து செல்கிறது. டி இமானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் அவருக்கு இது 100வது படம் அவரின் உழைப்பின் பலன் திரையில் தெரிகிறது படத்தில் சில லாஜிக் குறைபாடுகளும், திரைக்கதையில் தொய்வும் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இந்த படம் விண்வெளிக்கே சென்று வந்த அனுபவத்தை நமக்கு தருகிறது.