“விஜய் என் தலைவர்” ; அஞ்சாமல் சொல்கிறார் அஞ்சான் நாயகி..!


சமீபத்தில் நடிகை சமந்தாவின் பேட்டி ஒன்றின் வீடியோ கிளிப் இணையதளத்தில் வெளியானது.. அதில் நடிகர் விஜய்யை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “விஜய் என் தலைவர்’ என பதில் சொன்னார்.. பொதுவாக எந்த நடிகையாக இருந்தாலும் தலைவர் என்றால் ரஜினியை மட்டும் தான் சொல்வார்கள்.. சமந்தா மட்டும் இப்படி சொல்ல காரணம்..?

விஷயம் இருக்கிறது.. சமந்தாவுக்கு மூன்று படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்தவர் விஜய்.. சமந்தாவும் இன்னும் கொஞ்ச நாட்களில் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடப்போகிறார். அதனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இனி அவருக்கு வரப்போவதில்லை.. அதனால் தான் தைரியமாக விஜய் என் தலைவர் என கூறினாராம் சமந்தா.