ஏம்ப்பா.. அவங்க ரெண்டுபேரும் தான் ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போய் பிரியாணி வரைக்கும் சாப்பிட்டு வர்றாங்களே.. அப்புறம் எதுக்குப்பா உங்களுக்குள்ள இந்த பொறாமை, ‘……சரிப்பு” எல்லாம் என சொல்லத்தோன்றும் வகையில் விஜய்யின் ‘புலி’ பட ட்ரைலர் மீது ஆன்லைனில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அஜித் ரசிகர்கள். ரத்தக்காயம் வராத வெறித்தாக்குதல்.
விஷயம் என்னவோ ரொம்பவே அற்பமானது. கேப்டன் விஜயகாந்த் பாணியில் ஒரு புள்ளிவிபர கணக்கை பார்த்துவிட்டால், உங்களுக்கு நடப்பது என்ன என்பது எளிதாக புரிபடும். அதாவது சமீபத்தில் புலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது இல்லையா..? நேற்று முன்தினம் யூடியூப்பில் வெளியிடப்பட்ட ‘புலி’ டிரைலர் 10 மணி நேரங்களுக்குள் 40000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றும், 20 மணி நேரத்திற்குள் 10 லட்சம் ஹிட்ஸ்களை பெற்றும் உள்ளது.
இதன்மூலம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் விக்ரமின் ‘ ஐ’ பட டிரைலர்களின் சாதனையை முறியடித்தது. அதே சமயம் அந்த டிரைலர்கள் வாங்காத ‘டிஸ்-லைக்’குகளின் எண்ணிக்கையிலும் ‘புலி’ சாதனை படைத்திருக்கிறது. அதாவது, அந்த டிரைலரைப் பிடிக்கவில்லை என்றால் ‘டிஸ்-லைக்’ பட்டனை அழுத்த வேண்டும்.
இதுவரை ‘ஐ’ படத்தின் டிரைலரை 3,901 பேர் மட்டுமே ‘டிஸ்-லைக்’ செய்துள்ளனர். என்னை அறிந்தால் டிரைலரை இதுவரை 5,941 பேர் ‘டிஸ்-லைக்’ செய்துள்ளனர். ஆனால், ‘புலி’ டிரைலரை நேற்றுவரை வரை 11,686 பேர் ‘டிஸ்-லைக்’ செய்துள்ளனர். இதற்கு மறைமுகமான.. இல்லையில்லை நேரடியான காரணம் ஒன்றே ஒன்றுதான்.
அதாவது ‘புலி’ டிரைலரை 34 மணி நேரத்தில் ‘லைக்’ செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 60,786. ஆனால் இந்த 8 மாதங்களில் ‘என்னை அறிந்தால்’ டிரைலரை லைக் செய்தவர்கள் 66,638 பேர் மட்டுமே. அதேபோல ‘ஐ’ டிரைலரை கடந்த 9 மாதங்களில் 53,600 பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர்.
அந்தவகையில் ‘லைக்’குகள் எண்ணிக்கையில் ‘என்னை அறிந்தால்’ படம் எட்டு மாதத்தில் நிகழ்த்திய சாதனையை ‘புலி’ டிரைலர் இரண்டே நாட்களில் முறியடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப்போது புரிகிறதா விஜய் படத்தின் ட்ரெய்லருக்கு ஏன் இத்தனை டிஸ்-லைக்குகள் என்று. அஜித் ரசிகர்களும் கூடவே கொஞ்சம் விக்ரம் ரசிகர்களும் செர்ந்துகொண்டுதான் இப்படி காட்டு காட்டென்று காட்டுகிறார்கள் என கொந்தளிக்கிறார்களாம் அஜித் ரசிகர்கள்…
அதுசரி.. இவங்கெல்லாம் எப்பப்பா தங்களோட சொந்த வேலைய பார்க்கப்போவாங்க..?