மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து 10 ஆண்டுகளாக சினிமாவில் காலூன்றி இருக்கும் நடிகை அமலாபால் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அதோ அந்த பறவை போல”.
ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார்.
இதையொட்டி அமலா பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
’என் பேவரிட் நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. போராட்டங்கள் அதிகம்.
பல விஷயங்களை இழக்க நேர்கிறது. ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான். விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் ரொம்ப ஸ்மார்ட், என்று கூறியுள்ளார்.