சானியா மிர்சா வேடத்தில் நடிகை கரீனா கபூர்?


விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள் தயாரிப்பது தற்போது பிரபலமாகி வருகிறது.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் தோனியின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளிவந்து வசூலை அள்ளின.

தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், ஆகியோரது படங்களும் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் பிரபல இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் பயோபிக் உருவாகிறது. இதனை சானியா மிர்சா சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். இப்படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்க உள்ளார்.

இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.