வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன. ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என தனித்தனியாக பிரிந்து இருந்தாலும், பெரும்பாலான அஜித் ரசிகர்கள் ரஜினியை ரசிப்பவர்கள் தான். இது ஒருபுறமிருக்க இரண்டு பேரையுமே ரசிக்கும் பொதுவான ரசிகர்களுக்கு இதில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்கிற குழப்பம் இருக்கவே செய்யும்.
ஆனால் இளம் நடிகராக அறிமுகமாக இருக்கும் நடிகர் விக்ரமின் மகன் துருவ்விடம் பொங்கல் படங்களில் அவரது முதல் சாய்ஸ் எதுவாக இருக்கும் என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் பேட்ட படத்தைத்தான் முதலில் பார்ப்பேன் என்றும் விஸ்வாசம் படத்தை இரண்டாவதாக பார்க்க உள்ளேன் என்றும் அதிரடியாக கூறியுள்ளார் இந்த இவரது பேச்சு ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய குஷியை ஏற்படுத்தியுள்ளது