பிலிம் சேம்பர்-கில்டு அமைப்புக்கு பெப்சி மூலம் செக் வைத்த விஷால்..!


தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய செயல்பாடுகளால் கலக்கமடைந்த பெப்ஸி அமைப்பின் தலைவர் மீண்டும் வேலை நிறுத்தம் பண்ணுவதாக அறிவித்தார். இந்தநிலையில். திடீரென இருதரப்பிலும் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பெப்சி தொழிலாளர்களை கொண்டு மட்டும் வேலை செய்வதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்தது.

நாங்கள் எப்படி பெப்சி தொழிலாளர்களை மட்டுமே வைத்து வேலை செய்யும்போது, பெப்சி தொழிலளார்களும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என ஒரு அதிரை நிபந்தனையை விதித்தது. இதனால் முதலில் அதிர்ச்சியானாலும் பின்னர் இதனை ஏற்றுக்கொண்டதாம் பெப்சி

அப்படி இருதரப்பும் நிபந்தனைகளை ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு விட்டால் இனி தயாரிப்பாளர் கில்டு, பிலிம் சேம்பர் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக பதிவு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள்.

புதிதாக வரும் தயாரிப்பாளர்களில் பலரும் சங்க கட்டணம் குறைவு என்பதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சேராமல் கிட்டு, பிலிம் சேம்பர் ஆகியவற்றில் சேர்கின்றனர். தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவால் இந்த சங்கங்களில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறையும். சங்கங்கள் பலவீனப்படும். என்கிறார்கள்.