தவறு செய்தாலும் தப்பாக நடந்தாலும் பிள்ளைகளையோ மனைவியையோ, அல்லது பெற்றவர்களையோ கண்டிக்க, தண்டிக்க. இங்கே இன்னும் சவுத்ரிகளும் வால்டர் வெற்றிவேல்களும் இருக்கிறார்களா என்ன..? அப்புறம் சரத்குமார் மட்டும் இதற்கு விதிவிலக்காகி விடுவாரா என்ன.?
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது, சமீபத்தில் ராதிகா, விஷாலை விஷால் ரெட்டி என அழைத்தாரே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என சரத்குமாரிடம் கேட்டபோது, சிம்பு, ராதிகா பேசியதை நான் ஆமோதிக்கவில்லை என்றவர், அடுத்து சொன்னதுதான் காமெடியின் உச்சம்.
ஆனாலும் சந்திரபாபுவை சந்தரபாபு நாயுடு என்றும், ஐஸ்வராயா ராய் என்று கூறினால் தானே எல்லோருக்கும் தெரிகிறது. இதையெல்லாம் குற்றமாக கூறவேண்டாம்.. அவர் பெயர் பேஸ்புக்கில் விஷால் ரெட்டி என இருப்பதால் ஒருவேளை அப்படி கூப்பிட்டிருக்கலாம்” என்றாரே பார்க்கலாம்.உண்மையில் விஷாலின் பேஸ்புக் பக்கத்தில் விஷால்(https://www.facebook.com/VishalKOfficial) என்று தான் இருக்கிறது (பொய்யை கூட கரெக்டா சொல்ல மாட்றீங்களே பாஸ்! ).
ராதிகா இதுநாள் வரை விஷாலை எந்த இடத்திலும் விஷால் ரெட்டி என அழைத்ததே இல்லையே.. ராதிகாவும் அந்த பிரஸ்மீட்டின் ஆரம்பத்தில் பேசும்போது விஷால் என பலமுறை குறிப்பிட்டுவிட்டு, பின்னர் திடீரென விஷால் ரெட்டின்னு சொன்னதுதான் பிரச்சனையே. அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கூறியது அப்பட்டமாக தெரிகிறது.
ஆனால் இதை சமாளிக்க சரத்குமார் சொன்ன காரணத்தை பார்க்கும்போது, வடிவேலுவிடம் மாதவன் ஒரு படத்தில் சொல்வாரே, “போய்யா.. உனக்கு சத்தியம் கூட ஒழுங்கா பண்ண தெரியலை” என்று, அதுதான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.