விஷால் படங்கள் ஓடுகிறதோ இல்லையோ நன்றாக கவனித்து பார்த்தால், அவர் தனது படங்களை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து வருவதை உணரமுடியும்…. காரணம் ‘மதகஜராஜா’ படத்தில் கற்றுக்கொண்ட வேதனையான பாடம் தான்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படத்தை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ரிலீசே பண்ணமுடியவில்லை பார்த்தீர்களா..?
அவ்வளவு உழைப்பை கொட்டியும், அந்தப்படம் வெளியாகாமல் தனது உழைப்பு பெட்டிக்குள் பூட்டப்பட்டுக்கிடக்கும் அவலம் இனி வரக்கூடாது என்றுதான் தானே சொந்தமாக தனது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் விஷால்.. அதனால் சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் பண்ண அவரால் முடிகிறது..
கடந்த வருடம் கூட அவர் நடிகர் சங்க தேர்தல், மழைவெள்ள நிவாரண உதவி என நிற்க நேரமில்லாமல் சுற்றினாலும் தனது ஆம்பள, பாயும் புலி ஆகிய படங்களை குறித்த நேரத்தில் வெளியிட்டார். இந்த வருடமும் ‘கதகளி’ மற்றும் ‘மருது’ படங்களை குறித்த நேரத்தில் வெளியிட்டார்..
ஆனால் முதன்முறையாக விஷாலின் கணக்கில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.. தற்போது சுராஜ் இயக்கத்தில் தான் நடித்துவரும் ‘கத்திச்சண்டை’ படத்தை தீபாவளி ரிலீஸாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது தீபாவளிக்கு வெறும் ஆடியோ ரிலீஸ் மட்டும் தான் என்றும் படம் நவம்பரில் தான் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.. விஷாலின் கையை மீறி அப்படி என்ன நடந்திருக்கும்..? இல்லை தீபாவளி அன்று போட்டியாக சில படங்கள் வருவதால் பம்முகிறாரா தெரியவில்லை..