உத்தம வில்லன், விஸ்வரூபம் படங்களை முடித்துவிட்டு தற்போது த்ரிஷ்யம் படத்தின் ரிமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் கமல். கமலின் நெருங்கிய நண்பருக்கு உத்தம வில்லன் இப்படத்தின் தயாரிப்பாளரான திருப்பதி பிரதர்ஸ் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்கள். ஆனால் பல மாதங்களுக்கு முன்னே முடிக்கப்பட்ட விஸ்வரூபம் அனைத்து வேலைகள் முடிந்தும் ரிலீசுக்கு வெளியே வரமாட்டேங்குது.
ஆனால் உத்தம வில்லனை நவம்பரில் திரைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று ரமேஷ் அரவிந்த் கூறிவிட்டாராம். அநேகமாக கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ந் தேதி உத்தம வில்லன் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன் விஸ்வரூபத்தையும் அதே 7ந் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார் அதாவது ஐ படத்தின் ரிலீசுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு விஸ்வரூபம் திரையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாராம். என்ன கொடுமை சார் இது, ரஜினி – கமல் திரையில் மோதிக் கொண்டால் அது இரண்டு ரசிகர்களுக்கும் தீபாவளி, ஆனால் கமல் படம் இரண்டுமே ஒரே நேரத்தில் திரைக்கு வந்தால் அது கமல் ரசிகர்களுக்கு தலை(வலி)தான்…