ரஜினிக்கா இப்படி நடந்தது ; அதிரவைக்கும் நிகழ்வு..!


பிறந்த குழந்தை ஒரு வயது ஆவதற்குள்ளாகவே அப்பா, அம்மா முகத்திற்கு அடுத்ததாக தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் ஒரே நபர் சூப்பர்ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்கமுடியும்.. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினியிடமே உங்க ஐடி கார்டு காட்டுங்க என கேட்டு ஸ்தம்பிக்க வைத்துள்ளார் ஒருவர்..

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றதில்லையா..? அதில் ஓட்டுபோடவந்த ரஜினியிடம் எல்லோரிடமும் கேட்பதுபோல உங்க ஐடி கார்டு ப்ளீஸ் என கேட்டாராம் தேர்தல் அதிகாரி.. ஆனால் ரஜினி அதை எடுத்துவர மறந்து விட்டுள்ளார். சில நொடிகள் யோசித்த அதிகாரி, உடனே சுதாரித்து, நீங்கள் ஓட்டுப்போடுங்க என க்ரீன் சிக்னல் காட்டினாராம்.