விஜய் ஆண்டனி என்றாலே அவரது படத்திற்கென ரசிகர்கள் கூடியது அவரது நடிப்பிற்காகவோ, அல்லது அவரது இசைக்காகவோ அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகளும் அந்த கதையில் அவர் தன்னை பொருத்திக்கொள்ளும் விதமும் தான் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தன.
பிச்சைகாரன் படம் வரை எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டு இருந்தது. ஆனால் அதன்பின் வெளியான அவரது படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டன. எமன், சைத்தான், அண்ணாதுரை, காளி, இதோ சமீபத்தில் வெளியான திமிரு புடிச்சவன் படம் உட்பட வரிசையாக சறுக்கலையே சந்தித்து வருகின்றன.
கதைகேட்பதில் விஜய் ஆண்டனி கவனக்குறைவாக இருக்கின்றாரா, அல்லது நட்பிற்காகவும் மற்றவர்களை கைதூக்கி விடுவதற்காகவும் தெரிந்தே இப்படி படங்களை ஒப்புக்கொள்கிறாரா என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. எது எப்படியோ இனி விஜய் ஆண்டனின் கொஞ்சமாவது சுதாரித்தால் தான் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று அமரமுடியும்.