விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக விஜய் தற்போது நடித்துவரும் அவரது 61வது படத்திற்கு ‘மெர்சல்’ என டைட்டில் வைத்து அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் அட்லீ..
அந்த போஸ்டரில் ஜல்லிக்கட்டு டிசைனில் டைட்டில் எழுதப்பட்டு இருப்பது, இதுவரை இளைய தளபதியாக இருந்த பட்டம், இப்போது வெறும் தளபதியாக மாறி இருப்பதும் ஒரு பக்கம் புருவங்களை உயர வைக்கிறது..
ஆனால் இன்னொரு பக்கம் டைட்டில், டைட்டில் டிசைன் ஆகியவை எல்லாம் வேறு பக்கம் இருந்து காப்பி அடித்துதான் இயக்குனர் அட்லீ வைத்துள்ளார் என்கிற விஷயத்தை சோஷியல் மீடியாவில் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார்கள் சிலர்.
அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு யுடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு குறும்படத்துக்கு சூட்டப்பட்ட தலைப்புதான் ‘மெர்சல்’ என்றும் ஒரு வருடத்துக்கு முன் உருவாக்கப்பட்ட மற்றொரு குறும்படமும் மெர்சல் என்ற பெயரில் யுடியூபில் இருக்கிறது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது..
அதேபோல மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கூட சல்மான்கான் நடித்த சுல்தான் போஸ்டரை அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சிலர் பகிரங்கப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே ராஜாராணி, தெறி, ஆகிய படங்களிலும் இதே வேலையை செய்த அட்லீ, தானே சொந்தமாக யோசிக்கமாட்டாரா என நக்கலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள் சோஷியல் மீடியாவாசிகள்..