அஜித்திடம் கேட்கத்தான் போகிறேன்.. எனக்கென்ன பயம்..? ; பழைய விஷயத்தை கிளறும் லைலா


நடிகை லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான, அஜித், சூர்யா, விக்ரம், ஆகியோருடன் நடித்த லைலாவுக்கு தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற ஹிட் திரைப்படங்கள் தேடி வந்தன. திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்தது தல அஜித்தின் தீனா படம் தான்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை லைலா தீனா படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், அஜித் சார்தான் என் கிரஷ். அவரோடு ‘தீனா’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி’ படத்துல ஒரு பாட்டுன்னு மூணு படங்களில் நடிச்சிருக்கேன். நாங்க சேர்ந்து நடிச்ச ‘தீனா’ படத்தில் இருந்துதான் அவருக்கு ‘தல’ன்னு அடைமொழி வந்தது.

அஜித் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல பிரியாணி சமைச்சுப்போடுவார்னு கேள்விப்பட்டேன்; ஆனா, நான் அவரோட நடிக்கும்போது எனக்கு பிரியாணியெல்லாம் செஞ்சு தரலை. அடுத்து அவரைப் பார்க்கும்போது எனக்கு பிரியாணி செஞ்சு கொடுங்கன்னு கேட்கணும்” என்று தெரிவித்துள்ளார்.