யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடிய ‘நெருப்புடா ‘ அருண்ராஜா காமராஜ்!

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார் பாடலாசிரியர் – பாடகர் அருண்ராஜா காமராஜ்.

ஜெய் – அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருகின்றனர் . சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம்.

“யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்….அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் அருண்ராஜா காமராஜ்.