அமீரின் உதவியாளர் இயக்கும் “டாலர் தேசம்”

7
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் “இக்னைட் பிக்சர்ஸ்” நிறுவனத்தாரின் முதல் படைப்பு “டாலர் தேசம்”.

அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது டாலர் தேசம்.

பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.

சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.

நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.

பருத்தி வீரன், யோகி படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜீயிடம் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மூடர்கூடம் படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன்.

படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜீத்.மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

MuthuGobal Directorial “Dollar Desam”

Ignite Pictures was floated with the sole objective of producing quality movies for the tamil cinema audience. The first from their stable is “Dollar Desam”.

Dollar Desam depicts the lifestyle of various classes of people in our tamil society, living amidst extreme globalisation.

Mutiple faces of the people separated into various classes by economical criteria, the care, love and violence in their life, which normal people like us are not used to, is the backbone of this story.

New faces have been introduced for over 100 characters, which honestly support the storyline of this social melodrama.

Filmed with an interesting screenplay, this movie is sure to entertain everybody.

MuthuGobal, an associate of Director Ameer debuts as the lead actor, director and producer.

Arun, an associate of Cinematographer Ramji, has wielded the camera.

Prasad vi Kumar, an accomplice of AR Rahman and Yuvan makes his debut as a music director.

Athiappan Siva, who has worked in films like Marina, Kedi Billa Killadi Ranga and Moodar Koodam is in charge of editing.

Dialogues are written by Sundar and Indrajith.With variety of performances from many other actors and hardwork from techinicians, Dollar Desam is due for release in theatres near you.