FIR எஃப் ஐ ஆர் திரைப்பட டிரைலர் வெளியானது..

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

இயக்குனர் மனு ஆனந்த் பேசியதாவது…

2006 ல் விஷ்ணு விஷாலை சந்திக்க முயற்சி செய்தேன். தயாரிப்பாளர் ஷ்ரவந்தி மூலம் தான் அவரை சந்தித்தேன். விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது, விஷ்ணு சார் அவரே இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தார். என் மீதும் என் திரைக்கதை மீதும் அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. தயாரிப்பாளராக அவர் என்னிடம் சொன்னது, மனு நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இந்தப் படம் வெற்றி பெறுவதை பொறுத்து தான் நான் அடுத்த படங்கள் தயாரிக்க முடியுமா என்பது முடிவாகும் என்றார். கௌதம் வாசுதேவன் மேனன் என் குரு, அவருடன் 8 வருடம் வேலை செய்திருக்கிறேன், இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்திலிருந்து மஞ்சிமா மோகன் அவர்களை தெரியும், சின்ன வயதிலிருந்தே நடிப்பதால் அவருக்கு கேமரா பயமே இருக்காது, மிகச் சிறந்த நடிகை. டயலாக் பெருசா இருக்கு, என்னால் பேச முடியாது என சண்டை போடுவார். ஆனால் ஒரே டேக்கில் முடித்து விடுவார். ரைசா வில்சனை இப்படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு முதலில் இல்லை, எனக்கு அவரை தெரியாது, எனக்கு பிக்பாஸ் பார்க்கும் பழக்கம் இல்லை, அவரை முதலில் வேண்டாம் என்றேன், ஆனால் அவரை மீட் பண்ணி பத்து நிமிடத்தில் அவர் என் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவர் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் அவருக்கு இரட்டை குணம் இருப்பது போன்ற பாத்திரம் ஆனால் திறமையாக செய்துள்ளார். இவர்களை தவிர மாலா பார்வதி மேடம், அமான் சார், ராம்ஜி எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள். அபிசேக் இந்தப் படத்திற்கு பிறகு நன்றாக வருவார் என நம்புகிறேன். பிரசாந்த் ரங்கசாமி அவரது ரியல் லைஃப் பாத்திரம் போன்றே நடித்திருக்கிறார். இயக்குநர் கௌரவ் எனக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுத்து தந்த ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டுக்கு நன்றி. சில்வா மாஸ்டர் எனக்கு பத்து வருட பழக்கம், தயங்கி தான் அவரிடம் கேட்டேன் என் மீதான பாசத்தில் தான் இந்தப் படம் செய்தார். அஷ்வத் இசையில் மிகப்பெரிய பலமாக இருந்ததற்கு நன்றி. எடிட்டர் ஜீ கே பிரசன்னா இப்படத்திற்கு அட்டகாசமாக எடிட்டிங் செய்துள்ளார். அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன். எங்களுடைய படத்தை நம்பி வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அவர்களுக்கும், செண்பகமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. என் குழுவிற்கு மிகவும் நன்றி. இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

ரைசா வில்சன் பேசியதாவது..

நான் மனுவை எப்படி மீட் பண்ணேன் என்பது முதற்கொண்டு அவரே எல்லாம் சொல்லி விட்டார். அவர் சொன்ன கதாபாத்திரம் சவாலாக இருந்தது, இதை மிஸ் பண்ண கூடாது என முடிவு செய்தேன். இப்படத்தில் ஒவ்வொருத்தரும் உயிரை தந்து வேலை செய்துள்ளார்கள், இந்த படத்தில் எனக்கு துப்பாக்கி தந்தார்கள், எனக்கு துப்பாக்கி என்றாலே பயம், ஆனால் சில்வா மாஸ்டர் தான் என்னை இயல்பாக்கி நடிக்க வைத்தார். இது ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

டிசைனர் பூர்த்தி பேசியதாவது..

மஞ்சிமாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் இயக்குநர் நிறைய இன்புட் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக காஸ்ட்யூம் செய்தோம். படம் அட்டகாசமாக வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது…

இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பெரும் பெரும் கடின உழைப்புடன் பணி புரிந்துள்ளனர், ஒரு மிகப்பெரிய படமாக வந்துள்ளது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. தியேட்டரில் பாருங்கள் நன்றி.

எடிட்டர் ஜீ கே பிரசன்னா பேசியதாவது…

இந்த படம் என் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்திற்கு வாய்ப்பு தந்த விஷ்ணு விஷாலுக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. இந்தப் படம் அனைவருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் அஷ்வத்

இந்த படத்தில் ஐந்து பாடல் இருக்கிறது அதில் இன்று ஒரு பாடல் வெளியாக உள்ளது. இதில் நிறைய பேர் பாடியுள்ளார்கள், வேலை பார்த்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி. ஐந்து பாடல் எடிட்டில் தப்பித்து வந்துவிட்டது, விஷ்ணு விஷால் படங்களில் நிறைய பெரிய இசையமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள், ஆனால் அவர்களை தாண்டி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இயக்குனர் மனு வாய்ப்பு தேடிய காலத்தில் அவர் வைத்திருந்த மற்ற ஸ்கிரிப்டுக்கும் என்னை தான் இசையமைப்பாளராக வைத்திருந்தார் அவருக்கு நன்றி. படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகை மஞ்சிமா மோகன் பேசியாதாவது

எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் மேலாளர் தங்கதுரை பேசியதாவது…

விஷ்ணு விஷாலை நீர்ப்பறவை படத்திலிருந்து தெரியும் அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்டபோது இதை தயாரிக்க முடியுமா? என தோன்றியது ஆனால் எல்லோருக்கும் கதை பிடித்திருந்தது. படம் நன்றாக வந்துள்ளது, அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் தந்தை பேசியதாவது…

என் மகன் ஒரு நல்ல மனிதனாக ஸ்டாராக வந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம், அடுத்து அவரை பற்றி நன்றாக எழுதிய பத்திரிக்கைகாரர்கள் காரணம். அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப் படம் பார்த்தேன் மிகச்சிறந்த படம் எல்லோரும் பாருங்கள் நன்றி.

நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…

எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி. மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன். இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர் தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார். மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உதய் அண்ணா, செண்பகமூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது, இப்போது இந்தப் படத்திற்காக சொல்லவில்லை, குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள், இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா அவர்களுக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி, என்றும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். எப்போதும் போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.