பிகில் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு எடிட்டிங் டப்பிங் உட்பட இறுதிகட்ட வேலைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
“கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே…?” என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, விஜய் சேதுபதி கூறியதாவது,
“இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்”
என்று பதில் அளித்தார்.
மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.