“பர்மா” புகழ் இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். ”ஜாக்சன் துரை” படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது.
பர்மா மற்றும் ஜாக்சன் துரை ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் 35 நாட்களில் முடித்துள்ளதால் தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார். போஸ்ட் புரடெக்ஷன் வேலை மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது.
படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே பெருந்தொகைக்கு “ஜாக்சன் துரை” படத்தின் தமிழ்நாடு திரையிடல் உரிமையை “தேனாண்டாள் பிலிம்ஸ்” வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பிரமாண்டமான “ஜாக்சன் துரை” படத்தை திரையில் காணலாம்.