எனக்கு ‘கங்காரு’ படத்தால் நல்ல பெயர் வரும் :இயக்குநர் சாமி
தன் ‘கங்காரு’ படம் பற்றிக் கேட்டபோது இயக்குநர் சாமி மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்
“முதலில் படம் பற்றி ஒன்றைத் தெளிவாகக் கூறி விடுகிறேன்.என் முந்தையமூன்று படங்களும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள்.இது யூ சான்றிதழ் பெற்ற படம் .படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை.முழுமையான பாச உணர்வைச் சொல்லும் படம்.இதை நவீன பாசமலர் என்று சொல்வேன்.எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு.
இதில் நடித்திருப்பவர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.
அண்ணனாக நடிக்க கங்காரு டைட்டில் ரோலுக்கு முழு படத்தை தோளில் சுமக்கும் நல்ல நடிகராக ஆள் தேடினோம். முதலில் ஆறேழுபேர் பார்த்தேன் திருப்தியில்லை. ஆறு மாதங்கள் தேடினோம் .இந்த அர்ஜுனாவைவிட யாரும் சரியாகச் செய்யவில்லை
‘கங்காரு’ வில் அர்ஜுனாவை நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டேன் அப்போது ஒரு தயாரிப்பாளர் வந்து தன் மகனை அந்த ரோலில் நடிக்க வைக்க பத்துலட்சம் தருவதாகக் கூறினார். அறிமுகம் செய்யுங்கள் என்றார் நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிகனை மாற்ற மாட்டேன். என்று கூறி திருப்பி அனுப்பினேன். அந்த அளவுக்கு அர்ஜுனா மீது எனக்கு நம்பிக்கை வந்து இருந்தது. படப்பிடிப்புக்குப் போனபிறகு என் கருத்து சரியானதுதான் என்று நீரூபித்தார்.
அது போலவே படத்தில் நடித்துள்ள பிரியங்கா, வர்ஷா,தம்பி ராமையா,கஞ்சா கருப்பு போன்றவர்களும் சரியாகச்செய்துள்ளனர்.
பல மொழிகளில் பலபாடல்கள் பிரபலபாடகராக பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் ‘கங்காரு’.முதல் படத்திலேயே கலக்கிவிட்டார்.
வைரமுத்துசார் பாடல் எழுத வேண்டும் என்று நான் விரும்பி அவரைச் சந்தித்தேன். நம் படத்தின் பட்ஜெட்டுக்கு அவர் வாங்கும் சம்பளம் கொடுக்க முடியுமா என்று பயந்தேன். எனவே யோசித்தேன். கதை கேட்டார் சொன்னேன். சம்பள விஷயம்பற்றி தயங்கிக் கேட்டதும் எனக்கு சம்பளம் முக்கியமில்லை என்று குறைத்துக்கொண்டு எங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கிக் கொண்டார்.
அவரிடம் பேசியபோது தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர் யோசிக்க வில்லை.ஒரு பாடல் உருவாகும்போது அவர் எடுத்த அக்கறை சாதாரணமானதல்ல.படத்துக்கு அவர் ஒரு பெரும்பலம். கங்காரு பாடல்கள் இப்போதே வெற்றிபெற்று விட்டன.24-ம்தேதி படம் வந்ததும் மேலும் பட்டையைக் கிளப்பும்.
நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன.
‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும். எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.”முரட்டு நம்பிக்கையுடன் கூறுகிறார் சாமி .
கிரிசரின் இல்லாமல் அழுதேன் : பிரியங்கா
‘கங்காரு’ படத்தில் குட்டி கங்காருவாக அதாவது தங்கையாக நடித்திருப்பவர் பிரியங்கா. அவர் ‘படத்தின்அனுபவம் பற்றிக் கூறும் போது.
“நான் நடித்த முதல்படம் ‘அகடம்’ கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம்தான் ‘கங்காரு’ ,இது நல்ல கதைக்காக சிறந்த நடிப்புக்காக பேசப்பட இருக்கும் சாதனைப் படம் என்பேன்.
என் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே சாமிசார் தேர்வு செய்தார். காரணம் தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள். 2,3 வசனம் பேசச் சொன்னார். ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார்.நடித்துக் காட்டினேன், அதுவும் கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன். அவ்வளவுதான் அது பிடித்துப் போய்சாமி சார் ‘நீதான் குட்டி கங்காருவா நடிக்கிறே’ என்றார்.
அதேபோல் படப்பிடிப்பு தொடங்கி 2வதுநாளே ஒரு காட்சி. என் லவர் இறந்து விடுவார்.
படிகளில் ஓடிவந்து அழ வேண்டும். படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்ப்பு… எல்லாம் வந்து விட்டது. அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுது விட்டேன். நான் நடித்ததைப் பார்த்து அடிபட்டதை பார்த்து யூனிட்டே கண்கலங்கினார்கள்.
அர்ஜுனா என் அண்ணனாக வருகிறார்.நடிக்கும் முன் நாங்கள் கலந்துபேசி புரிந்து நடித்தோம். எதையும் ஒரு முறை மானிட்டர் பார்த்து நடித்தது சுலபமாக இருந்தது.
சாமிசார் நான் நடித்த ஒரு காட்சியில் ‘நான் எதிர் பார்த்ததை விட நல்லா பண்ணிட்டே ‘என்றார் . எனக்கு அப்போதே விருது கிடைத்த மகிழ்ச்சி .படத்தின்வெற்றி அடுத்த விருதாக அமையும் என்று நம்புகிறேன். ” என்கிறார்.
டைரக்டர் அடிக்கலை. திட்டலை : வர்ஷா
படத்தில் ‘கங்காரு’அர்ஜுனாவின் ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை வர்ஷா. அவர் தன் அனுபவத்தை கூறுகிறார். இப்படி!
“நான் ஏற்கெனவே ஏழு படங்களில் நடித்து இருக்கிறேன். ‘கங்காரு’ எனக்கு எட்டாவது படம்.
‘நாகராஜசோழன்’ பட சமயம் கலைஞர் டிவியில் இண்டர்வியூ பார்த்து சாமி சார் பேசினார்.போட்டோ ஷூட் எடுத்தார்கள் டைரக்டருக்கு திருப்தி.
‘கங்காரு’ படத்தில் ஹீரோவின் ஜோடி என்றார்கள். ஏற்கெனவே ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் ஹீரோவின் ஜோடி யாக நடித்திருக்கிறேன். படத்தில் ஹீரோவின் ஜோடி தான் என்றாலும் இது அண்ணன் தங்கச்சி கதை உனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று சிலர் கூறினார்கள்.
இருந்தாலும் இந்தக்கதை எனக்குப் பிடித்து இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தன.அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
கங்காரு’ படப்பிடிப்பு கொடைக்கானலில் சுமார் 60 நாட்கள் நடந்தது கொடைக்கானலில் மிகவும் குளிராக இருந்தது. பாடலுக்கு குளிர குளிர நீரில் நனைய வைத்து எடுத்தார்கள்.
ஹீரோ புதியவர், எளியவர், ரொம்பவும் அர்ப்பணிப்பு உள்ளவர். டைரக்டர் எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தார்.
டைரக்டர் எமோஷனல் டைப்தான். அவர்கோபப் படுவார் அடிப்பார் திட்டுவார் என்று கூறினார்கள். எனக்கு பிரச்சினை இல்லை. அடிக்கலை. திட்டலை. பிரியங்கா புதுப்பொண்ணு நல்ல திறமைசாலி ” என்றார்.
சந்தோஷமாக வலித்தது : அர்ஜுனா
அண்ணன் தங்கை பாசத்து கதையில் பாசக்கார பயபுள்ளயாக அண்ணனாக அதாவது கங்காருவாக நடித்திருக்கும் அர்ஜுனா என்ன சொல்கிறார்?
” கங்காருதான் எனக்கு ழுழு முதல் படம் என்பேன். .ஏற்கெனவே நான் மலையாளத்தில் ஏழெட்டு படங்களில் நடித்திருந்தாலும் கங்காருதான் எனக்கு நடிப்பில் முதல் படம்.காரணம் அப்படி ஒரு கதை, அப்படி ஒரு கேரக்டர், அப்படி ஒரு டைரக்ஷன்.
தமிழில் சாமிசாரை ‘உயிர்’ முடிந்து பார்த்தேன் ‘மிருக’ த்தில் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. இப்போது கங்காருவில் நடிக்க வைத்துவிட்டார்.
நான் நிறைய தபிழ்ப் படங்கள் பார்ப்பேன்.சாமி சார் டைரக்ஷன் பற்றி கேரளாவிலும் கேள்விப்பட்டேன். திறமையான டைரக்டர். என் நண்பர் மூலம்தான் அவரது அறிமுகம் கிடைத்தது. 5 நிமிடம்தான் கதை சொன்னார். நேர்மையான கதை.. எனக்கு பிடித்து விட்டது. அது வித்தியாசமாக இருந்தது. இந்தப்பட வாய்ப்பு என் அதிர்ஷ்டம். இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
படப்பிடிப்பு அனுபவம் நன்றாக இருந்தது.
தங்கையாக நடித்த பிரியங்காநல்ல திறமைசாலி.என் ஜோடியாக நடித்த வர்ஷா அனுபவசாலி தம்பிராமையா, கஞ்சாகருப்பு, போல பலஅனுபவசாலிகளுடன் நடிக்கும் வாய்ப்பும் இப்படத்தில் கிடைத்தது. அவர்கள் சிறு சிறுவிஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.அழுகிற காட்சிகளில் எல்லாம் நிஜமாகவே அழுது நடித்தேன். க்ளைமாக்ஸ் காட்சியாக வரும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது காலில்அடிபட்டு பெருவிரல் நகம் பெயர்ந்து விட்டது. மோசமாக வலித்தது, வேதனையாக இருந்த து. நடித்து முடித்த போது யூனிட் கைதட்டியபோது அது சந்தோஷமான வலியாக மாறியது. ” என்கிறார்.
‘கங்காரு’ வாய்ப்பு என் பாக்யம்: இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்
பிரபலபாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் ‘கங்காரு’. அவர் தன் அனுபவங்களை இங்கே கூறுகிறார்…
” நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை. காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் ‘ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில்ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.
‘இனி நானும் நானில்லை’ என்கிற அந்தப்படலும் ஹிட்தான். மீண்டும் இசைஅமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார். கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல்பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.
வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம் .அவர் பாடல்கள் படத்துக்குப் பெரியபலம். படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து2பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரியவெற்றி. ஐடியூன்களில் நம்பர் ஒன் ஆனது.
காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படவெற்றி மகிழ்ச்சிக்காக காத்திருக்கிறேன்.”என்கிறார் நாடறிந்த பாடகரும் அறிமுக இசையமைப்பாளருமான ஸ்ரீநிவாஸ்.