ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன்


இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். படத்தில் மிகவும் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மொட்டை ராஜேந்திரன். அதன் பின்னர் காமெடி வேடங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். காமெடியனாக இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த மொட்டை ராஜேந்திரன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார். “ராபின் ஹுட்”என்ற படத்தில்தான் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.இத்திரைப்படத்தை கார்த்திக் பழனியப்பன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ராட்சசன் அசுரன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தவர்.

“ராபின்ஹீட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.