உத்தமவில்லன் படத்தில் அனைத்து பாடல்களையும் கமலே எழுதி, சில பாடல்களை பாடியும் உள்ளார். குறிப்பாக இதில் இடம்பெற்ற இரண்யன் நாடக பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கமலுடன் அறிமுக பாடகியான ருக்மிணி அசோக்குமார் என்பவரும் இணைந்து பாடியுள்ளார். இவருக்கு எப்படி இந்த வரலாற்று வாய்ப்பு கிடைத்ததாம்..?
ஜிப்ரானை ஒரு ஆடியோ விழாவில் சந்தித்த ருக்மிணி, அவர் இசையில் பாட விருப்பம் என்றும் கூறியதுடன், அவர் சொன்னபடி தன்னுடைய பாடல் சிடி ஒன்றையும் அனுப்பி வைத்தாரம். சில நாட்கள் கழித்து தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரும்படி சொன்ன ஜிப்ரான், சில வரிகளை கொடுத்து அவரை பாடச் சொல்லியிருக்கிறார்.
உத்தமவில்லன் படத்திற்காகத்தான் இந்த டெஸ்ட் என்று பின்னர்தான் தெரிந்ததாம். ருக்மிணிக்கு கர்நாடக சங்கீதத்துடன் ஹிந்துஸ்தானி ராகமும் தெரியுமாம். சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த ருக்மிணி அசோக்குமார் அவரிடம் ஆசி பெற்றார். அப்போது. ‘இசையும் வாழ்க்கையும் சிறக்க வாழ்த்துக்கள்’ என்று கமல் தன் கைப்பட எழுதி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்துள்ளார்.