மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் சாதனை செய்த படம் ‘புலிமுருகன்’.
மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3 D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது.
பாடல்கள் – சினேகன், ஆர்.பி.பாலா / ஒளிப்பதிவு – ஷாஜிகுமார்
இசை – கோபிசுந்தர் / எடிட்டிங் – ஜான்
ஸ்டன்ட் – பீட்டர் ஹெய்ன் / கதை, திரைக்கதை – உதயகிருஷ்ணா.
இந்த பிரமாதமான படத்தை இயக்கி இருப்பவர் – வைஷாக்
தயாரிப்பு – டோமிச்சன் முலக்குப்பாடம்.
இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா.
ஒரு மிருகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை இந்த படத்திற்கு எடுத்தது மிகப்பெரிய சிரமம். ஏன் என்றால் விலங்குகளுக்கு எப்போது கோபம் வரும் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நிறைய விஷயங்கள் இந்த படத்தில் நடந்தது. இதில் நடித்த நடிகர்கள் வேலை செய்த தொழில்நுட் கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிரமமப் பட்டனர். அந்த பிரமாண்டத்தை பார்த்த மலையாள ரசிகர்கள் “புலிமுருகனை “ கொண்டாடினார்கள்.
இப்போது புலிமுருகன் படம் தமிழ் ரசிகர்களுக்காக 3 D தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. மலையாள ரசிகர்களுக்காகவும் 3 D தொழில்நுட்பமாக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த மலையாள 3 D படம் சமீபத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப் பட்டது. ஒரே காட்சியில் 25000 ம் பேர் பார்த்து அது “ கின்னஸ் “ சாதனையாக பதிவிடப்பட்டது.
இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.