பிக் பிலிம் international கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “
இந்த படத்தில் ஆதவன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். மற்றும் கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன், நெல்லை சிவா, ஆக்ஷன் பிரகாஸ், நாஞ்சில் விஜயன், மதுமிதா, ரஜனி, முத்துக்காளை, வெங்கல்ராவ், வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – S.K
இசை – லியாண்டர் லீ மார்ட்டி
கலை – மகி
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
நடனம் – சுரேஷ்
எடிட்டிங் – இத்ரீஸ்
தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம்
இணை தயாரிப்பு – M. செந்தில் பாலசுப்ரமணியம்
தயாரிப்பு – கோவை ரவிச்சந்திரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.அழகுராஜ்.
படம் பற்றி இயக்குனர் அழகுராஜிடம் கேட்டோம்..
காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. நாயன் ஆதவனும் நாயகி அவந்திகாவும் காதலர்கள். ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரிகிறார்கள். பிறகு நாயகி அவந்திகாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற போகும் நேரத்தில். திருமணத்தை தடுக்க நாயகன் ஒரு கேங்க்ஸ்டர் குழுவுடன் பொள்ளாச்சி செல்கிறார். போகும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சம்பவங்களையும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். திருமணத்தை நிறுத்தினார்களா இல்லையா என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக, ஒரே நாளில் நடந்து முடியும் கதையாக உருவாக்கி இருக்கிறோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.