ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் “ கத்திசண்டை “ படத்தையும் தயாரித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. வீரசிவாஜி படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.சுகுமார் / இசை – D.இமான்
எடிட்டிங் – ரூபன் / வசனம் – ஞானகிரி, சசி பாலா
பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ் / கலை – லால்குடி இளையராஜா நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக்
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது… படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைய உள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் வெளியிட கேட்டபோது டீசரை பார்த்த அவர் உடனே அருமையாக உள்ளது டீசர் நான் கண்டிப்பாக வெளியிடுகிறேன் என்று வெளியிட்டார்.
டீசர் நன்றாக உள்ளது படம் நிச்சயமாக வெற்றியடையும் அது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது பட குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பாராட்டினார். அவர் பாராட்டியது போல படம் நிச்சயம் வெற்றியடையும். சமீபத்தில் இந்த படத்திற்காக யுகபாரதி எழுதி D.இமான் இசையமைத்து ஸ்ரேயா கோஷல் – ஸ்ரீராம் பார்த்தசாரதி குரல்களில் உருவான “அடடா அடடா என் தேவதையே இது நாள் வரையில் என் விழிகள் தேடலையே” என்ற பாடல் காட்சி தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பில், எம்.சுகுமார் ஒளிப்பதிவில் , விக்ரம் பிரபு – ஷாம்லி நடனமாட ஜார்ஜியா என்ற ஊரில் கஸ்பகி என்ற இடத்தில் படமாக்கினோம். அந்த பாடல் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் கணேஷ் விநாயக்.