வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் ‘கனவு வாரியம்’!

இயக்குனர்அருண்சிதம்பரத்தின்’கனவுவாரியம்’திரைப்படத்தை இந்தியாவில்வார்னர் பிரதர்ஸ்நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS)தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படம்’கனவு வாரியம்’, திரைக்கு வரும் முன்பே7சர்வதேச விருதுகளையும், 9நாடுகளில் இருந்து 15சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2சர்வதேச ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’. ‘ரெமி’ விருதைஇதற்கு முன் வென்றவர்கள்’ஜூராஸிக் பார்க்’ படத்தைஇயக்கியஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ‘லைப் ஆப் பை’ படத்தைஇயக்கியஆங் லீ, ‘கிளேடியேட்டர்’ படத்தை இயக்கியரிட்லி ஸ்காட், ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை இயக்கியஜார்ஜ் லுகாஸ், ‘த காட்பாதர்’ படத்தை இயக்கியபிரான்சிஸ் போர்ட் கப்பல்லோ. இத்திரைப்படத்தின் மூலம்இயக்குனர் அருண் சிதம்பரம், 2 ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியா முழுவதும்வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

“93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவானவார்னர்பிரதர்ஸ்நிறுவனம் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம். ‘கனவு வாரியம்’ விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் பல சர்வதேசவிருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் எனஅனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வார்னர் பிரதர்ஸ்படத்தை வெளியிடுவதால் ‘கனவு வாரியம்’ வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதுவும், ‘கனவு வாரியம்’ வார்னர் பிரதர்ஸ்வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது ‘கனவு வாரியம்’ படக்குழுவினருக்கும், என் போன்ற வளரும் இளம் இயக்குனர்களுக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருவதாகும்” என்றார்இயக்குனர் அருண் சிதம்பரம்.

இந்தியாவில் இருக்கும்வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ்கூறுகையில், “கனவு வாரியம் திரைப்படம் எளிய மக்களின் வாழ்வியலைசுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல… இது நம்பிக்கையைவிதைக்கும் படமும் கூட. உலகின் புகழ்ப்பெற்ற பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் வென்ற ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்”.

இயக்குனர் அருண்சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (B.E., MS)முடித்துவிட்டுபுகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்)பணிபுரிந்தார்.சினிமாவின் மீதுள்ள இலட்சியத்தால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையைவிட்டு விட்டு சென்னை வந்து ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்குகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். அருண் சிதம்பரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகுஅப்துல்கலாம்அவர்களால்பெரிதும்பாராட்டப்பெற்றவர்.

அருண் சிதம்பரம், ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம் மறைந்த முதல்வர் மாண்பமை திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகர்.

‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர்கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை – ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு – எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு – காகின்.

‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம் மற்றும்கார்த்திக்சிதம்பரம்அவர்களும் இணைந்து’டிசிகாப் சினிமாஸ்’ (DCKAP CINEMAS) பேனரில்’கனவு வாரியம்’திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.