பக்கிரி – விமர்சனம்


தனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பக்கீர்’ என வெளியான படம் தான் தற்போது தமிழில் பக்கிரி என வெளியாகியுள்ளது.

சலவைத் தொழிலாளியான தாய்க்கு மகனாக பிறக்கும் தனுஷுக்கு விவரம் தெரியவரும் காலகட்டத்தில் தன் தந்தை பாரீசை சேர்ந்த வெளிநாட்டுக்காரர் என்று தெரியவருகிறது இனிமேலும் ஏழையாக வாழ விரும்பாத தனுஷ் அந்த வயதிலயே பணம் சம்பாதிப்பதற்காக ஒரு பக்கம் மேஜிக் கற்றுக் கொண்டாலும் இன்னொரு பக்கம் சில குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சிக்கலை தேடிக்கொள்கிறார்.

ஒருகட்டத்தில் தாயின் மரணத்திற்கு பின் ஞானோதயம் பெரும் தனுஷ், தாயின் அஸ்தியுடன் தந்தையை சந்திக்க பாரிசுக்கு கிளம்புகிறார் பாரிசில் இறங்கியவர் எதிர்பாராத சூழல்களால் வெவ்வேறு நாடுகளுக்கு திசை மாறி பயணிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. வெளிநாட்டுக்கு வந்த இடத்தில் தான் வாழ்க்கை என்பது என்ன என இன்னும் சில பாடங்கள் தனுஷிற்கு கிடைக்கின்றன.

பாரிசில் தன் தந்தையை தனுஷ் சந்தித்தாரா..? தான் பணக்காரனாகவே வாழ வேண்டும் என்கிற தனது லட்சியத்தை வைத்து எந்த மாதிரியான பாதையை தேர்ந்து எடுத்தார் என்பது மீதிக்கதை.

இதுவரை தனுஷ் நடித்த படங்கள் அனைத்தையும் பார்த்திருப்பீர்கள் அல்லவா..? அவற்றில் எல்லாம் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரொம்பவே பக்குவப்பட்ட ஒரு தனுஷை இந்த படத்தில் நாம் பார்க்க முடிகிறது. அம்மா இருக்கும் வரை வாழ்க்கையின் சீரியஸ்னஸ் தெரியாமல் ஆட்டம் போடுவதும் வெளிநாட்டில் சூழல்கள் தன்னை வெவ்வேறு முறையில் சுழற்றி அடிக்கும்போது அதற்கு ஏற்ப சமாளிப்பதும் என அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு தந்துள்ளார் தனுஷ்.

வெறும் மூன்றே மூன்று காட்சிகளில் மட்டுமே தனுசு சந்திக்கும் நாயகி எரிந மொரியார்டிக்கும் தனுஷுக்கும் இடையே துளிர்விடும் காதல் ஒரு அழகான ஹைக்கூ. அந்த கதாநாயகியும் தான்.. ஜாக்பாட் அடித்தது போல எதிர்பாராமல் தனுஷிற்கு உதவி செய்யும் நடிகை பெரிநிஸ் பிஜோ கதாபாத்திரம் படத்துடன் அழகாக இணைக்கப்பட்டுள்ளது அந்த நடிகை அவருடைய முன்னாள் காதலனிடம் தன் காதலை தெரியப்படுத்த தனுஷ் உதவுவது டச்சிங்கான ஒன்று. தனுஷின் அம்மாவாக வரும் அம்ருதா சந்த் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது சாதாரண டூரிஸ்ட் ஆக செல்பவர்களுக்கும் வேலை தேடி செல்பவர்களுக்கும் எப்படி வித்தியாச முகம் காட்டுகிறது என்பதை சில காட்சிகளில் பளிச்சென படம் போட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர் கென் ஸ்காட்..

இதுவரை தனுஷ் பிடிக்காத ரசிகர்கள் யாரேனும் இருந்தால் இந்தப்படத்திந மூலம் அவர்களுக்கு பிடித்துவிடும்