சீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் ?


இந்த நிலையில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீமராஜா வருகிற செப்டம்பர் 13ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளிவருகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு சில காரணங்கள் உண்டு..

தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதை முறைப்படுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஒரு படம் தணிக்கை சான்றிதழ் வாங்கியதும் எந்த தேதியில் வெளியிட விருப்பம் என்று 3 தேதிகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டு வரன்முறை குழு இதனை ஆய்வு செய்து இந்த தேதியில் வெளியிடலாம் என்று கடிதம் கொடுக்கும். அதன் பிறகே படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பை வெளியிட முடியும். ஆனால் இது எதையும் சீமராஜா டீம் கடைபிடிக்கவில்லையாம்.

மேலும் அதே தேதியில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வெளிவருகிறது. சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான் என்றாலும் சமீபகாலமாக இருவருக்கும் கருத்துவேறு ஏற்பட்டிருப்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் இருவர் படமும் ஒரே தேதியில் வெளிவர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு பக்கம் படத்தின் படப்பிடிப்புகள் இப்போதுதான் முடிவடைந்துள்ளது. இதற்கு பிறகு டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, எட்டிட்டிங் உள்ளிட்ட பணிகள் இருக்கிறது. அதன் பிறகு தணிக்கை சான்றிதழ் பெற்று, தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பித்து அதன் பிறகே வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும். ஆனால் விதிகளுக்கு முரணாக சீமராஜா பட வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரும்புத்திரை ரீலீஸையே முறைப்படி செய்தவர் விஷால். சீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ..?