உள்ளே போ – தனது ட்விட்டர் ஐடியை மாற்றிய ஜீவா!


உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திரங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதை சிலர் மதிக்காமல் கும்பலாக வெளியே சுற்றுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜீவா தனது ட்விட்டர் ஐடியையே “உள்ளே போ” என்று மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார் நடிகர் ஜீவா.