கஜினிகாந்த் – விமர்சனம்


ரஜினி ரசிகரான ஆடுகளம் நரேனின் மகன் ஆர்யா.. தர்மத்தின் தலைவன் படம் வெளியான நேரத்தில் பிறந்ததால் ரஜினிகாந்த் என பெயர் வைக்க, அவரோ அந்த படத்தில் வரும் ஞாபகமறதி ரஜினிகாந்த் போலவே வளர்கிறார். இதனால் ஆர்யாவுக்கு யாருமே பெண் தர மறுக்கிறார்கள். அப்படித்தான் சாயிஷாவின் தந்தை சம்பத்தும், ஆர்யாவின் ஞாபகமறதியால் அவதிப்பட்டு, அதனாலேயே தனது பெண்ணை தர மறுக்கிறார்.

இந்தநிலையில் தனது ஞாபக மறதியாலேயே எதிர்பாராதவிதமாக சாயிஷாவின் காதலை பெறுகிறார் ஆர்யா. தனது குறையை மறைத்து சாயிஷாவை காதலிக்கும் ஆர்யாவுக்கு பின்னர்தான் அவர் சம்பத்தின் மகள் என தெரிய வருகிறது. தனக்கு பதிலாக தனது நண்பன் சதீஷை ஆள் மாறாட்டம் செய்யவைத்து இருக்கும் சிக்கலை இன்னும் பெரிதாக்குகிறார்.

இதில் சம்பத்தின் நண்பர் மகனான போலீஸ் அதிகாரி லிஜீஷ், சாயிஷாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய விரும்புவதால் ஆர்யாவின் காதலுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்.. இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு இந்த கஜினிகாந்த் தனது காதலியை கரம்பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஞாபகமறதி கதாபாத்திரத்தில் ஆர்யா கச்சிதம். ஒவ்வொருமுறை அவர் ஞாபக மறதியால் அடுத்த வேலையை கவனிக்கப்போய்விடும்போது அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்தை ஏற்படுத்தி விடுகிறார். நாயகி சாயிஷா இந்தப்படம் மூலம் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு படி நெருக்கமாகி இருக்கிறார். ஆர்யா சொல்லும் பொய்களை எல்லாம் நம்பி அவர் விடும் லுக் இருக்கிறதே, செம கிக்..

சதீஷ், கருணாகரன் இருவருமே மீட்டருக்குளேயே காமெடி செய்திருப்பதால் ரசிக்க முடிகிறது. மொட்டை ராஜேந்திரன் அலப்பறை செம கலாட்டா. சம்பத்தின் கேரக்டரில், அதை அவர் வெளிப்படுத்தி இருப்பதில் கம்பீரம். நீலிமா, ஆடுகளம் நரேன், உமா பத்பநாபன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தால் கவனிக்க வைக்கிறார்கள். லிஜீஷின் வில்லத்தனம் ஓரளவு ஈடுபடுகிறது.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்களும் அதை ஒளிப்பதிவாளர் பல்லு படமாக்கிய விதமும் அருமை. காமெடியை மட்டுமே மனதில் வைத்து, லாஜிக்கை ஒதுக்கி வைத்து காமெடிக்கும் கலகலப்புக்கும் கியாரண்டியான படம் என்பதை படம் முழுக்க நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். குறிப்பாக ஞாபக மறதிக்கான காட்சிகளை ஓரளவு ரசிக்கும்படியாகவே உருவாக்கி இருக்கிறார் இடையில் உள்ளத்தை அள்ளித்தா பாணியில் காட்சிகளை வைத்ததற்கு பதிலாக மாற்றி யோசித்திருக்கலாம்.

குடும்பத்துடன் சிரித்து மகிழ உத்தரவாதம் தருகிறது இந்த கஜினிகாந்த்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *