“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..!


தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும், சிம்புவுக்கும் ஆகாது என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் அந்த மனக்கசப்பை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு விஷாலுடன் சமரசமாகிவிட்டார் சிம்பு. நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து நேற்று நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்பு விஷாலை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களை வியப்பு கலந்த மகிழ்ச்சி அடைய வைத்தது.

அதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.

இதில் பேசிய சிம்பு, “நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலை எதிர்த்து பேசினேன். அதற்காக அவர் செய்யும் நல்லது எல்லாவற்றையும் எதிர்க்கணும்னு அவசியம் இல்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டும்போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார். அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்” என பேசி இன்னும் ஆச்சர்யத்தை கிளப்பினார்.