நாங்களாவது நடத்துறோம் ; அதிர்ச்சி தந்த அஜித் ரசிகர்கள்


வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது. எப்போதாவது ஒருமுறை இந்த படத்தின் ஸ்டில்கள், பெரு போஸ்டர் என வெளியிட்டு வருகிறார்களே தவிர படத்தின் டீசரும், டிரைலரும் என எதுவும் வெளியாகவில்லை அவ்வப்போது சிங்கிள்களாக பாடல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புகைப்படங்கள் போஸ்டர்கள் பாடல்கள் என பரபரப்பு கிளம்பி வரும் நிலையில் விஸ்வாசம் படத்திற்கு அடக்கி வாசிப்பது தமிழ்நாட்டு ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளதோ என்னவோ, கேரளாவிலுள்ள அஜித் ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிட்டது.

அதனால் தான் கேரளாவில் உள்ள அஜீத் ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் தாங்களாகவே இந்த படத்தில் ஆடியோ ரிலீசை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் இந்த நிகழ்வில் படத்தின் ஆடியோவை வெளியிட்டதுடன் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்