அகிலன் விமர்சனம்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அகிலன்.

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் அகிலன். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். நடிகை தன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார்.

ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் நங்கூரமாய் இருக்கிறான் அகிலன். அவன் உட்பட அனைத்து கடத்தல் காரர்களுக்குமான தலைவனாக கபூர் வலம் வருகிறான்.

கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அகிலன் ஒரு கட்டத்தில் அவனை சந்திக்க, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவனை நாடு கடத்தும் அசைமெண்ட் அவனிடம் கொடுக்கப்படுகிறது.

இதற்கிடையே அகிலனின் ஆட்டத்தை அடக்க நினைக்கும் டெல்லி இன்டலிஜன்ஸ் அதிகாரி பல்வேறு முயற்சிகளை செய்து அவனை கைது செய்ய துடிக்கிறான். இறுதியில் அகிலன் அந்த அசைமெண்டை முடித்தானா? அதற்கு பின்னால் அவன் வைத்திருந்த மாஸ்டர் பிளான் என்ன? அகிலனை அடக்க நினைத்த அதிகாரிக்கும், அவனுக்கும் இடையேயான முட்டல் மோதல் எங்கு போய் முடிந்தது? என்பதே அகிலன் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹார்பர், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடலும், அதனை சார்ந்த இடங்களும் நமக்கு நிச்சயம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். அகிலனாக ஜெயரவி; அவரின் அலட்டிக்கொள்ளாத நடிப்பு அகிலனுக்கு அப்படி பொருந்தி இருந்தது.

இன்டலிஜன்ஸ் அதிகாரியாக வரும் ஜிராக் ஜானியின் ஸ்கீரின் பிரசன்ஸ் மிரட்டுகிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். மெயின் வில்லனாக வரும் தருண் அரோரா, அவருக்கு கீழ் இயங்கும் ஹரீஷ் பேரடி, யூனியன் தலைவராக வரும் மதுசுதன், ஒரு காட்சியில் வந்தாலும் மிரட்டி விட்டு சென்ற பாக்ஸர் தீனா உள்ளிட்டோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் திரைக்கதையில் அதிகமாக கவனம் செலுத்துயிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது. கதை இதுத்தான் என்று தெரிந்தாலும் கூட சில சிக்கலான திருப்பு முனைகள் மூலம் சில என்ன நடக்கும் என்பதை கணிக்க கடினமாக இருப்பதினால் அது சுவாரசியத்தை கூடுகிறது.

மொத்தத்தில் அகிலன் சிறப்பாக உள்ளது.