பல்லு படாம பாத்துக்க ; விமர்சனம்

வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு வருவதை போல கதை தொடங்குகிறது. வனப்பகுதிக்கு தற்கொலை செய்து கொள்ள வரும் அவர்களை ஜாமிகள் துரத்துகின்றன. அந்த ஜம்பிகளிடம் இருந்து தப்பித்தனரா? தற்கொலை முடிவை கைவிட்டனரா? என்பதுதான் மீது கதை.

அட்ட கத்தி தினேஷ், ஷாரா, லிங்கா, சாய் தீனா, ஜெகன், அப்துல், விஜய் வரதராஜ், ஆனந்த் பாபு, ஹரிஷ் பெராடி என மிகப்பெரிய ஆண் நட்சத்திரங்கள் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும் சில நடிகர்கள் கடுப்பேற்றி உள்ளார்கள்..

மெயின் ரோலில் வரும் அட்ட கத்தி தினேஷ் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னாலும் காமெடி பண்ண முடியும் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது காமெடியை விட அப்துலின் காமெடி தான் நம்மை சிரிக்க வைக்கிறது
கிளாமருக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் விடுக்கென வந்து நிற்கிறார் சஞ்சிதா. ஜாம்பி படம் என்றாலே ஹீரோயின்களுக்கு இந்த காஸ்டியூம் தானா என்று கேட்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்…

சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சியை காட்டிலும், மற்ற நட்சத்திரங்கள் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தான் திரையரங்கையே அதிர வைக்கிறது. சில இடங்களில் இரட்டை அர்த்தம் இல்லை, நேரடியாகவே சொல்கிறோம், என்ற பாணியில் அதிர்ச்சியளிக்கவும் செய்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்தாலும், படத்தில் இடம்பெறும் வசனங்கள் தான் ரசிகர்களிடம் அழுத்தமாக பதிகிறது.

சில இடங்களில் 5 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்று அப்படியே தெரிந்தது. அதே போல காமெடியிலும் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல அளவிற்கு இப்படத்தில் ஹிட்லர் கதாபாத்திரம் ஓன்று வரும். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் படத்திற்கு ஒத்துபோகவில்லை. இளைஞர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் என மனதில் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விஜய் வரதராஜன். ஆனால் படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரசிக்கும்படியான ஒரு தாக்கத்தை இந்தப்படம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை..