அழகிய கண்ணே ; விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஆர் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அழகிய கண்ணே. இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் ஷெட்டி தோற்றத்தில் இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லியோ சிவகுமாருக்கு சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதனால் இவர் ஊரில் பல நாடகங்களை நடத்தி வருகிறார். ஊரில் இவரின் புரட்சி நாடகங்கள் சிறப்பாக இருக்கிறது. இதனால் இவர் மீது கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி காதல் கொள்கிறார். இருந்தாலும் இவர் தன்னுடைய லட்சியத்திற்காக போராடுகிறார். இதனால் இவர் இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருகிறார்.

இன்னொரு பக்கம் கதாநாயகி சஞ்சிதாவும் வேலை காரணமாக சென்னைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு குழந்தையும் திருமணம் ஆனால், லியோ இயக்குனர் ஆக வேண்டும் என்பதால் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. இறுதியில் லியோ தன்னுடைய லட்சியப்படி இயக்குனர் ஆனாரா? சஞ்சிதாவின் ஆசையையும் குடும்ப பொறுப்பையும் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தின் மூலம் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். சஞ்சிதா, சுஜாதா ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

படத்தில் சில ஃபீல் குட் தருணங்கள் இருக்கிறது. கஸ்தூரியின் குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் மூதாட்டி, அவருக்கும், குழந்தைக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் அழகாக இருக்கிறது. அந்த காட்சிகளை பார்க்கும்போது பெற்றோர் ஏன் குழந்தைகளுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்பது புரிகிறது.
திரைக்கதையில் வலுவில்லை. படத்தில் சர்பிரைஸ் இல்லை, டுவிஸ்டுகள் இல்லை.